Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீஎன்ட்ரி ஆகிறார் அனுஷ்கா

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (10:21 IST)
சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காத அனுஷ்கா, மறுபடியும் ரீஎன்ட்ரி ஆகிறார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா, சில வருடங்களாக அதைக் குறைக்கவே முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டார். இத்தனைக்கும் அவர் யோகா டீச்சர் வேறு. அவர் நடிப்பில் கடைசியாக ‘பாகுபலி 2’ மற்றும் ‘பாகமதி’ என இரண்டு படங்கள் வெளியானது.

இதில், ‘பாகுபலி 2’வில் கிராபிக்ஸ் மூலம் அவரது எடையைக் குறைத்துக் காண்பித்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், ‘பாகமதி’யில் குண்டாகவே தெரிந்தார் அனுஷ்கா. உடல் எடையால் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தவர், பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு எப்படியோ எடையைக் குறைத்துள்ளார். எனவே, நடிப்பதற்காக மீண்டும் கதைகேட்கத் தொடங்கியுள்ளார். ஜெயேந்திரா கூறிய கதை பிடித்துவிட, அவருக்கு சம்மதம் சொல்லிவிட்டார். ஹீரோவாக கோபிசந்த் நடிக்கும் இந்தப் படம், தெலுங்கில் தயாராகிறது. தமிழுக்கு எப்போ வருவீங்க அனுஷ்கா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments