Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்காவின் அடுத்த பட ரிலீஸ் தள்ளிவைப்பு!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (08:57 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments