Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மொழிகளில் அனுஷ்கா படம்

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (20:44 IST)
அனுஷ்கா நடித்துள்ள ‘பாக்மதி’ படம் மூன்று மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது.


 
 
அனுஷ்கா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பாக்மதி’. ஜி.அசோக் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆதி பினிசெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர். மதி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
 
யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் தயாராகியுள்ளது. 
 
இன்று அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
அனுஷ்கா நடிப்பில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் ‘பாகுபலி 2’ வெளியானது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ‘பாகுபலி’க்குப் பின் வெளியாகும் படம் என்பதால், இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படம் தவிர அனுஷ்கா வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments