Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்காவின் அடுத்த படமான ‘காடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (15:47 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அனுஷ்கா இப்போது தனது 50 ஆவது படமான ‘காதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 2010 ஆம் ஆண்டு வேதம் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸானது. அதில் அனுஷ்கா சுருட்டு புகைப்பது போல ஆக்ரோஷமான லுக்கில் காணப்பட்டார். இதையடுத்து தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 அம் தேதி பேன் இந்தியா ரிலீஸாக இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments