Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவரை மனதில் வைத்து அந்த கதை எழுதினேன்… ஆனால் இப்போது என்னிடம் கதை இல்லை.. அனுராக் காஷ்யப் விளக்கம்!

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (11:40 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘ஆல்மோஸ்ட் பியார் வித் டிஜே மொகபத்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அவரின் ஆரம்பகால படங்கள் பெற்ற வரவேற்பை இப்போதுள்ள படங்கள் பெறுவதில்லை. ஆனாலும் அவை வெளிநாட்டு சினிமா ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.


கடைசியாக அவர் இயக்கிய கென்னடி என்ற திரைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கிரீனிங் என்ற பிரிவில் இந்த படம் திரையிடப்பட்டது. முதலில் இந்த கதையை அனுராக் காஷ்யப் நடிகர் விக்ரம்முக்காகதான் எழுதியதாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஆனால் தான் பயன்படுத்தாத எண்ணுக்கு இதுபற்றிய தகவலை அனுராக் காஷ்யப் அனுப்பி இருந்ததாக அதற்கு விக்ரம் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் இப்போது இதுபற்றி பேசியுள்ள அனுராக் காஷ்யப் “சேது படத்தில் இருந்தே விக்ரம்மின் நடிப்பை நான் கவனித்து வருகிறேன். அவரை ஒரு நடிகராக நான் நேசிக்கிறேன். அவரை மனதில் வைத்துதான் நான் கென்னடி கதையை எழுதினேன். ஆனால் இப்போது அவருக்கான கதை எதுவும் என்னிடமில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் அடுத்த திரைப்படம் அரசியல் கதைக்களமா? ராமநாதபுரத்தின் முக்கிய சம்பவம்..!

ஹீரோவுக்கு இணையாக அனிருத்துக்கு கட்டவுட்.. ஆந்திராவில் புதிய டிரெண்ட்..!

ரஜினியின் ‘கூலி’ விழாவுக்கு வர பணம் கேட்டாரா டி ராஜேந்தர்? பரபரப்பு தகவல்..!

ரைஸா வில்சனின் கிளாமர் சொட்டும் புகைப்படத் தொகுப்பு!

அழகூரில் பூத்தவளே… வாணி போஜனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments