Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஒன்றும் தொண்டு நிறுவனம் அல்ல… என்னிடம் பேச பணம் தரவேண்டும்- பிரபல இயக்குனர் அறிவிப்பு!

vinoth
திங்கள், 25 மார்ச் 2024 (07:20 IST)
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் தமிழில் விஜய்யின் லியோ படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பல சுயாதீனப் படங்களையும் கலைஞர்களையும் அனுராக் காஷ்யப் வெகுஜன தளத்துக்கு அறிமுகப்படுத்தி வந்தார். ஆனால் இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “நான் நிறைய நேரத்தை புதியவர்களுக்கு உதவி செய்வதற்காக வீணடித்துள்ளேன். ஆனால் பெரும்பாலானவை முட்டாள்தனமாக முடிந்துள்ளது.

தங்களை மேதைகளாக நினைத்துக்கொள்பவர்களுக்காக என்னுடைய நேரத்தை இனிமேல் வீணாக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அதனால் யாராவது இனிமேல் என்னை சந்திக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தொகையை நிர்ணயித்துள்ளேன்.

10 நிமிடங்கள் சந்திக்க வேண்டுமென்றால் 2 லட்சம் ரூபாயும், ஒரு மணிநேரத்துக்கு 5 லட்ச ரூபாயும் தரவேண்டும். தொகையை முன்கூட்டியே தந்துவிடவேண்டும். அதற்கு சம்மதம் என்றால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments