Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி & கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தில் இணைந்த மற்றொரு நடிகை!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (08:42 IST)
ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து சைரன் என்ற படத்தில் நடிக்க உள்ளனர்.

ஜெயம் ரவி நடிப்பில் இந்த மாதத்தில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பின்னர் அவர் நடித்த அகிலன் திரைப்படமும் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபைத்தில் வெளியானது.

அந்த திரைப்படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ’சைரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கலந்துகொண்டார். படத்தில் இரண்டாவது நாயகியாக அவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments