பிரசாந்த் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகிறதா அந்தகன்?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:51 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிடுகிறார். இந்த படம் சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலிஸூக்கு காத்திருக்கிறது. படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முடிந்து சில ஆண்டுகள் ஆனாலும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சரியான நாள் பார்த்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய காத்திருந்த படக்குழு, இப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி பிரசாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments