Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத்தும் விநாயகர் ராசியும்

அஜீத்தும் விநாயகர் ராசியும்
, புதன், 3 ஜூன் 2015 (10:12 IST)
வான்மதி படத்தில் அஜீத், பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா என்ற பாடலுக்கு ஆடியிருப்பார். அதேபோல் அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிபோச்சுடா என்ற பாடல் விநாயகர் சதுர்த்தி அன்று பாடுவது போல் இடம்பெறும். இந்த இரு படங்களுமே ஹிட்.
அஜீத் படத்தில் விநாயகர் சதுர்த்தி பாடல் இருந்தால் நல்ல ராசி என்று அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள். இந்த ஜோசியத்தை இங்கே குறிப்பிட காரணம் உள்ளது. 
 
சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று அஜீத் ஆடிப்பாடும் மாஸ் பாடல் ஒன்று இடம்பெறுகிறதாம். ஷோபி நடனம் அமைக்கும் இந்தப் பாடலில் 150 நடனக் கலைஞர்கள் இடம்பெறுவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
 
அப்படியானால் இந்தப் படமும் வான்மதி, அமர்க்களம் போன்று ஹிட்டாகுமா?
 
கணேசனுக்குதான் வெளிச்சம்.

Share this Story:

Follow Webdunia tamil