Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கச்சிய தப்பா பேசிட்டேன்; மன்னிச்சுடுங்க அண்ணா! – விஜய் சேதுபதியிடம் ஆசாமி கதறல்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (15:10 IST)
விஜய் சேதுபதியின் மகள் குறித்து அவதூறாக பேசிய நபர் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், தமிழ் உணர்வாளர்கள் பலர் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அப்போது சமூக வலைதளங்களில் ஒரு கணக்கில் விஜய் சேதுபதி மகள் குறித்து ஆசாமி ஒருவர் அவதூறாக பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ட்விட்டர் கணக்கு இலங்கையிலிருந்து செயல்பட்டதை கண்டறிந்து ஆசாமியை பிடித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் விஜய் சேதுபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதில் “இனி என் வாழ்நாளில் இதுபோன்ற தவறை செய்ய மாட்டேன். தங்கை குறித்த என் தவறான ட்வீட்டிற்கு மன்னித்து விடுங்கள் விஜய் சேதுபதி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments