Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சீதக்காதி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:57 IST)
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’  வெற்றிப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரன் தற்போது மீண்டும்  'சீதக்காதி' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
 
இது விஜய் சேதுபதியின் 25-வது திரைப்படம். இந்த படத்தில்  இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் அர்ச்சனா, பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். இவர் சமீபத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் 96 படத்திற்கும் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சீதக்காதி திரைப்படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  85 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் அவரின் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை  பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் சீதக்காதி திரைப்படம் வரும் நவம்பர் 16-ம் தேதி வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் GOAT படத்தை முந்தும் அஜித்தின் குட் பேட் அக்லி.. ரிலீஸில் புதிய உச்சம்!

விஜய் சேதுபதி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்கு மாஸான டைட்டில்!

கல்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும்?.. இயக்குனர் நாக் அஸ்வின் அப்டேட்!

சூர்யாவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு… எந்த படத்தில் தெரியுமா?

விறுவிறுப்பாக நடக்கும் ‘வாடிவாசல்’ படப்பணிகள்.. ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments