Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு இன்னும் 3 நாட்களே… மின்னல் வேகத்தில் அண்ணாத்த படக்குழு

Webdunia
திங்கள், 3 மே 2021 (16:37 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் ஒரு பாடலைக் கூட படத்தில் இருந்து நீக்கியுள்ளதாம் படக்குழு.

இந்நிலையில் இப்போது ரஜினி இருக்கும் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவருக்கான காட்சிகள் உள்ளதாம். அதை முடித்துவிட்டு அவர் தனி விமானத்தில் சென்னை வர உள்ளாராம். அதன் பின்னர் 7 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பின்னர் படக்குழு திரும்ப உள்ளனர். அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments