Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த ஷூட்டிங் எப்போது… குழப்பத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (07:05 IST)
அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் மீண்டும் தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்தை சமீபத்தில் இயக்குனர் சிவா நேரில் சென்று சந்தித்து வந்தார். இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது சம்மந்தமாக படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எந்த அறிவிப்பும் சொல்லப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் இணையத்தில் வெளியான செய்திகளைப் பார்த்து அவர்களே குழம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அண்ணாத்த படத்தில் கமிட் ஆனதால் வேறு படங்களுக்கு செல்லவும் முடியாமல் அவர்கள் தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments