Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாத்த படக்குழுவின் புதுத்திட்டம்… எகிறும் பட்ஜெட்!

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (18:54 IST)
அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இடம் மாற்றப்பட்டுள்ளதால் அதன் பட்ஜெட் அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து அடுத்த அப்டேட்டாக அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாம். முன்னதாக ஹைதராபாத்தில் நடக்க இருந்த படப்பிடிப்பு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் படத்தின் பட்ஜெட்டில் சில கோடிகள் அதிகமாகும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி போனதால் பல கோடி ரூபாய் முடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments