Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

vinoth
புதன், 29 மே 2024 (09:16 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பல மாதங்களாக விட்டு விட்டு நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிலும் பிஸியாக இருப்பதே இந்த படத்தின் தாமதத்துக்குக் காரணம். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. ஆனால் ஷூட்டிங் முடியாமல் சென்று கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள அஞ்சலி படம் பற்றி பேச தனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் “படம் பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் இப்போது நான் பேச முடியாது. தயாரிப்பாளரோ அல்லது இயக்குனர் ஷங்கர் சாரோதான் அதுபற்றி பேச முடியும்.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments