Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோச்சடையான், ஜில்லா, வீரம் ஓபனிங்கை தாண்டிய அஞ்சான்...

கோச்சடையான், ஜில்லா, வீரம் ஓபனிங்கை தாண்டிய அஞ்சான்...
, செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (10:51 IST)
கோச்சடையான், வீரம், ஜில்லா படங்களின் ஓபனிங்கை அஞ்சான் முந்தியதாக அஞ்சான் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

1500 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது அஞ்சான். முன் பதிவுகளிலேயே முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன.

அதன் காரணமாக படம் குறித்து எழுதப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் அஞ்சானின் ஓபனிங் வசூலை பாதிக்கவில்லை.

முதல் மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 30 கோடிக்கு அஞ்சான் வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இது கோச்சடையான், வீரம், ஜில்லா படங்களின் வசூலைவிட அதிகம்.

தமிழ் சினிமா சரித்திரத்தில் முதல் மூன்று தினங்களில் 30 கோடிகளைத் தாண்டிய ஒரே படம் அஞ்சான் என்றும் தயாரிப்பு தரப்பு கூறியிருப்பது முக்கியமானது.

அதாவது கோச்சடையான், வீரம், ஜில்லா மட்டுமின்றி சிவாஜி, எந்திரன் ஓபனிங்கையும் அஞ்சான் முறியடித்துள்ளதாம்.

இது உண்மையா என்பதை மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil