Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமலுக்கு தங்கையாக நடிக்கும் அனிதா சம்பத்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (14:31 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் 4ல் கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதாவிற்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது,  மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விமலுக்கு தங்கை கேரக்டரில் அனிதா நடிக்கிறார்.  தன் தங்கைக்கு திருமணம் செய்ய போராடும் அண்ணனின் வாழ்க்கையை குறித்து படத்தின் கதை நகர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments