ஊருக்குள்ள உங்களை ஏசுறாங்க: சுரேஷுடன் டூயட் பாடிய அனிதா!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (09:34 IST)
ஊருக்குள்ள உங்களை ஏசுறாங்க: சுரேஷுடன் டூயட் பாடிய அனிதா!
அனிதா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் முதல் நாள் முதல் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது அந்த சண்டை படிப்படியாக வளர்ந்து கொண்டேதான் வருகிறது என்பதையும், கமல்ஹாசன் முன்னிலையிலும் நேற்றும் கூட இருவரும் மோதிக் கொண்டனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் திடீரென இன்று சுரேஷ் மற்றும் அனிதா ஆகிய இருவரும் டூயட் பாடி ஆட்டம் போடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இது ஒரு டாஸ்க் ஆக இருந்தாலும் இந்த டூயட்டில் கூட அனிதா, சுரேஷ் காலை வாரும் வகையில், ‘ஊருக்குள்ள உங்களை ஏசுராங்க’ என்று அந்த பாட்டின் வரிகளை சுரேஷுக்கு குத்திக் காட்டியது சக போட்டியாளர்கள் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. உடனே அவர்கள் எழுந்து கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்
 
மொத்தத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியை அனைத்து போட்டியாளர்களும் ரவுண்டு கட்டிவிட்டார்கள் என்பதும் இனி அவர் அந்த வீட்டிலிருந்து சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்பதும் தெரிகிறது. ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தி எத்தனை பேர் வந்தாலும் சமாளித்து அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments