Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுகாக நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய அனிருத்

Webdunia
ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (19:04 IST)
சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' படத்தின் பாடல்கள் நேற்று முன் தினம் மதுரையில் பிரமாண்டமாக வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் அன்றிரவே இந்த படத்தின் டீசரும் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் அதே நாள் இரவில் 'கோலமாவு கோகிலா' படத்தின் 'திட்டம் போட தெரியலை' என்ற பாடலும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், 'இன்று சிவகார்த்திகேயன் நாள்' என்பதால் திட்டம் போட தெரியலை' பாடல் நாளை வெளியாகும் என்று அறிவித்தார். இதனையடுத்து நேற்று இரவு இந்த பாடல் வெளியானது.
 
தனது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனுக்காக அனிருத், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' பாடலை ஒருநாள் கழித்து வெளியிட்டு நட்பின் புனிதத்தை காட்டியுள்ளதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், '“உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுடைய பாடலுக்கும் வரவேற்பு கிடைக்கும்” என்று கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments