Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பில்போர்ட் தளத்தில் இடம்பெற்ற அனிருத் பாடல்!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (20:36 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின்  ஜவான் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்  பில்போர்ட் தளத்தில் குளோபல் 200 பிரிவில்  97 வது  இடம் பிடித்துள்ளது.
 
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று  வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான்  மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதேபோல் ஜவான் படமும் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், ஜவான் படம்  வெளியாகி இதுவரை கோடி ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ள நிலையில்,  இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சலேயே என்ற பாடல் உலகின் பிரபல பில்போர்ட் தளத்தில் குளோபல் 200 பிரிவில்  97 வது  இடம் பிடித்துள்ளது.

இதை அனிருத் தன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் காசில நான் குடிக்கிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது: பா ரஞ்சித்தின் ‘பாட்டில் ராதா’ டீசர்..!

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments