Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை மறுத்தாரா அனிருத்?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (08:00 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாவதால் அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் அதிக நாட்கள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்தை படக்குழு அனுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் தான் இப்போது ஒப்புக்கொண்ட படங்களில் பிஸியாக இருப்பதாக சொல்லி, நாசூக்காக இந்த பட வாய்ப்பை அனிருத் நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments