Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக அஜித்துடன் இணையும் அனிருத்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (11:36 IST)
அஜித் – அனிருத் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, சினிமாவிலும் அதிகமான தொடர்புகள் வேண்டாம்… தெரிந்த ஒருசிலரை மட்டுமே வைத்து காலத்தை ஓட்டலாம் என நினைக்கிறார் அஜித். அதனால் தான், அடுத்தடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவுக்கு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், சிவாவுக்குப் பிறகு இணைந்திருப்பவர் அனிருத்.
 
சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்துக்கு இசையமைத்ததன் மூலம் அஜித்தின் நட்பு வட்டத்துக்குள் நுழைந்தவர் அனிருத். அவர்  இசையமைத்த ‘ஆலுமா டோலுமா’ பாடல், இப்போதும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பேவரிட்டாக இருக்கிறது.  இரண்டாவது முறையாக ‘விவேகம்’ படத்திலும் இணைந்தவர்கள், தற்போது மூன்றாவது முறையாகவும் இணைய  இருக்கின்றனர்.
 
அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதும் சிவா தான் என உறுதியாகத் தெரிந்துவிட்டது. தற்போது தோள்பட்டை அறுவை  சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் அஜித், மூன்று மாதங்களுக்கு இப்படியே தான் கட்டாய ஓய்வில் இருந்தாக வேண்டும். அதற்குள் கதையைத் தயார் செய்யச் சொல்லிவிட்டாராம் அஜித். அந்தப் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments