Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல்களை மெருகேற்ற chat GPT ஐப் பயன்படுத்துகிறாரா அனிருத்?... அவரே சொன்ன பதில்!

vinoth
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (14:16 IST)
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் படங்களுக்கு மட்டும்தான் அவர் இசையமைத்து வருகிறார். தமிழ் தாண்டியும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களுக்கும் இசையமைத்து வருகிறார். தற்போது கூலி,ஜனநாயகன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆனால் அவர் பாடல்கள் ஒரே மாதிரி இருப்பதாக குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகின்றன. அதே போல அவரின் எல்லா பாடல்களையும் அவரே பாடுகிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அனிருத் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “நான் என்னுடைய பாடல்கள் எங்காவது தேங்கிவிட்டால், உடனே chat GPT-ல் (நான் ப்ரீமியம் கணக்கு வைத்திருக்கிறேன்). அந்த பாடலை போட்டு எனக்கு இரண்டு வரிகள் சரியாக பொருந்தவில்லை. அதை சரிப்படுத்தித் தா என்று கேட்பேன். அது எனக்கு 10 வகையான வார்த்தைகளைக் கொடுக்கும். அதில் பொருத்தமானதை எடுத்து நான் பயன்படுத்திக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இப்போது அவர் மேல் மேலும் விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் தொடர்கள் நிறைவு.. 2 தொடர்களின் நேரம் மாற்றம்..!

கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அஜித் காலில் விழுந்த ஷாலினி.. வீட்டுக்கு போனதும் நான் காலில் விழனும்.. அஜித் சொன்ன காமெடி..! வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments