Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கையாக உருமாறிய அங்காடி தெரு பட ஹீரோ - எம்புட்டு அழகா இருக்காரு!

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (15:39 IST)
திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து துணி கடைகளில் வேலை செய்வோரின் வாழ்க்கையின் அவலநிலையை அப்படியே காட்டி அதில் காதல் விதை விதைத்திருந்த படம் தான் அங்காடி தெரு. 


 
கடந்த 2010ம் ஆண்டு  இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு என பயங்கர பிஸியாகி முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார். 
 
ஆனால், படத்தின் நாயகன் மகேஷ் என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் சினிமா வட்டாரத்தில் இல்லாதிருந்த நிலையில் தற்போது அவர் "தேனாம் பேட்டை"  என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் இளைஞராகவும் , திருநங்கையாகவும் நடித்து வருகிறாராம். 


 
எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடிய பிரபலங்கள்  நடித்துள்ள இத்திரைப்படத்திற்காக மகேஷ் திருநங்கையாக மாறியிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரின் கண்களை கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments