Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அது பொய்யான தகவல் - விளாசிய ராம்

அது பொய்யான தகவல் - விளாசிய ராம்
, செவ்வாய், 3 மார்ச் 2015 (15:28 IST)
பாலையும், நீரையும் பிரித்தெடுப்பதைவிட கடினமானது, தமிழ் சினிமாவில் எது உண்மையான தகவல், எது பொய்யான தகவல் என கண்டறிவது. சில தினங்கள் முன்பு, ராம் இயக்கப் போகும் புதிய படத்தில் மம்முட்டியுடன் ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பதாக செய்தி கசிந்தது. 
 
ராமின் நெருக்கமான வட்டாரத்திலிருந்து வந்த தகவல் என்பதால் நாமும் அதனை வெளியிட்டிருந்தோம். திடீர் திருப்பமாக அந்த செய்தியை ராம் மறுத்துள்ளார்.
 
ஹீரோயின் யார் என்பது முடிவாகவில்லை. ஹீரோயினுக்கான தேடல் நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக ஆண்ட்ரியாவும், அஞ்சலியும் மம்முட்டியுடன் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
 
ராமே கூறியிருப்பதால் இந்த செய்தியை நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil