Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்தில் இணைந்த ஆண்ட்ரியா… !

vinoth
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:40 IST)
சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

அதில் ஸ்டார், கிஸ் மற்றும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படம் ஆகியவை அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன. இதையடுத்து கவின் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வருவதாக தெரிகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றும் அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

இந்த ஆபாச சீனை மாத்துங்க? அந்த வார்த்தையை சென்சார் பண்ணுங்க!? – இந்தியன் 2வில் எக்கச்சக்க கரெக்சன்ஸ் சொன்ன சென்சார் போர்ட்!

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு மெய்ன் வில்லன் SJ சூர்யாவா?

சூர்யா 44 படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments