Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சினிமாவில் பிரேக் இருக்காது… பிரசாந்த் நம்பிக்கை!

vinoth
சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:35 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் இன்று அதிக திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக். நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எதிர்பார்த்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அந்தகன் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சினிமாவில் சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டது பற்றி பேசியுள்ள பிரசாந்த் “இனி வெள்ளித்திரையில் பிரேக் இருக்காது. அடுத்தடுத்து படங்களுக்காகக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தியில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தை நடக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments