Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''யாத்திசை ''பட டிரைலரை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (20:07 IST)
'யாத்திசை' பட டிரெயிலரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், ஷக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், செம்மலர் அன்னம், சுபத்ரா, சந்திரகுமார் ஆகியியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் யாத்திசை. இப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி 34 லட்சம் பார்வையாளர்களுடன் இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

பாண்டியர்களின் வரலாற்றைக் கூறும் படமாக இது உருவாகியுள்ளது. புதுமுக இயக்குனர் மற்றும் நடிகர்களாக இருந்தாலும், இதன் உருவாக்கமும், இசையும், நடிகர்களின் நடிப்பும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

மணிரத்னத்தின் பொ.செ.-2 படத்திற்கு போட்டியாக இப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், யாத்திசை பட டிரெயிலரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’யாத்திசை திரைப்படத்தின் முன்னோட்டம் (ட்ரைலர்) பார்த்தேன். இளைஞர்கள் புதிய திரைக்களம் அமைத்து அருமையாக தயாரித்தும், இயக்கியும், நடித்தும் இருக்கிறார்கள். அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம், திறமை ஆகியவற்றை திரைப்பட முன்னோட்டத்தில் காண முடிந்தது. ஏப்ரல் 21ஆம் நாள் வெளிவரும்’’என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments