புலன் விசாரணை படத்தில் வருவது போன்று மிரட்டலாக நடிக்க வேண்டுமா? இல்லை முண்டாசுபட்டி போன்று சிரிக்கவைக்க வேண்டுமா? இரண்டு விதமாகவும் இலகுவாக நடிக்கத் தெரிந்தவர் ஆனந்த்ராஜ்.
அரசியல் மேடையில் அப்படி இப்படி பேசினாலும் நடிப்பு என்று வந்தால் மனிதர் இப்போதும் கெட்டிதான்.
தில்லுக்கு துட்டு பேய் படத்தில் நடித்ததால் பேய் படங்களில் நடிக்க இவரை தேடி வருகிறார்கள். புதிதாக இரண்டு பேய் படங்களில் கமிட்டாகியிருக்கிறாராம். என்றாலும், இவரது கட்டுமஸ்தான உடம்புக்கு காக்கி வேடங்களே அதிகம் வருகின்றன.
வல்லவனுக்கு வல்லவன் படத்தில் கெட்ட போலீசாக நடிப்பவர், புரூஸ்லீ படத்தில் நல்ல போலீசாக நடித்துள்ளார். உண்மையில் நீங்க நல்லவரா கெட்டவரா என்று நயாகன் பாணியில் கேட்டால், அட்டகாசமான சிரிப்பு வருகிறது ஆனந்த்ராஜிடமிருந்து.