Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு அழைப்பு விடுக்கவில்லை - அமித்ஷா அந்தர் பல்டி

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (18:54 IST)
நடிகர் ரஜினிகாந்தை பாஜகவில் இணையும் படி அழைக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அந்தர் பல்டி அடித்துள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதுதான் தற்போது ஹாட் டாபிக். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “பாஜகவின் கதவுகள் ரஜினிக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது. அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி முதலில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்திருந்தார். பாஜகவின் இந்த நிலைப்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த, வலுக்கட்டாயமாக இழுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மேலும், ரஜினியிடமிருந்து எந்த பதிலும் இதுவரை வெளிவரவில்லை. இது பாஜகவிற்கு ஏமாற்றத்தை தந்தது.
 
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா “ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கருத்து தெரிவித்தேன். அவரை பாஜகவிற்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கவில்லை. அரசியலுக்கு வருவது அவரது சொந்த முடிவு” என அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments