Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபு, விக்ரம் பிரபுவுடன் பட்டு வேஷ்டி சட்டையில் அமிதாப்பச்சன்

பிரபு, விக்ரம் பிரபுவுடன் பட்டு வேஷ்டி சட்டையில் அமிதாப்பச்சன்
, வெள்ளி, 13 மார்ச் 2015 (09:14 IST)
நகைக்கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக அமிதாப்பச்சன், பிரபு, நாகார்ஜுன், சிவராஜ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட நகைக்கடை விளம்பரங்களை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். 
இந்த நால்வர் அணியுடன் விக்ரம் பிரபுவும் இணைந்திருக்கும் புதிய விளம்பரம் ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதன் போட்டோவை அமிதாப்பச்சன் சமூக வலைத்தளத்தில், தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களுடன் நான் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.
 
இந்தப் புகைப்படத்தில் அமிதாப்பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகார்ஜுன், சிவராஜ் ஆகியோர் பட்டு வேஷ்டி சட்டையிலும், மஞ்சு வாரியர் பட்டுச் சேலையிலும் உள்ளனர்.
 
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil