Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமிதாப்பச்சன், ஹிர்த்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்...?

அமிதாப்பச்சன், ஹிர்த்திக் ரோஷனை இயக்கும் ஷங்கர்...?
, ஞாயிறு, 9 நவம்பர் 2014 (09:23 IST)
ஷங்கர் ஒரு படத்தை முடித்ததும்  அடுத்து அவர் யாரை இயக்குகிறார் என்ற கேள்வியும், அந்த ஒரு கேள்விக்கு ஒரு டஜன் பதில்களும் மீடியாவில் விவாதிக்கப்படும். எந்திரன் படத்துக்குப் பிறகு இந்தி மீடியாக்களும் இந்த கேள்விப் பதிலில் பங்களிப்பு செலுத்துகின்றன.
 
ஐ படம் முடிவடைந்த நிலையில், ஷங்கர் தனது அடுத்தப் படத்தை அமிதாப்பச்சன், ஹிர்த்திக் ரோஷனை வைத்து எடுக்கயிருப்பதாக முன்னணி இந்தி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிரிஷ் 3 -இன் திரைக்கதையை எழுதிய ஹனிசிங்குடன் ஷங்கர் கைகோர்த்திருப்பதாகவும் தகவல். இது ஹனிசிங்கின் காதுகளை எட்டி, அவர் இந்த செய்தியை மறுத்திருக்கிறார்.
 
எனினும், ஷங்கர் இயக்கத்தில் அமிதாப், ஹிர்த்திக் என்ற தகவலை இன்னும் இந்தி மீடியாக்கள் பிடித்துத் தொங்குகின்றன.
 
தகவல் உண்மையாக இருந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான்.

Share this Story:

Follow Webdunia tamil