Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பாலியல் கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என பயந்தேன் – விஜய் பட நடிகை புகார்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:15 IST)
நடிகை அமிஷா படேல் தன்னை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திரா மீது புகார் கூறியுள்ளார்.

நடிகை விஜய்யோடு புதிய கீதை படத்தில் நடித்தவர் அமிஷா படேல். இவர் நிறைய பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தற்போது நடந்த பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மும்பைக்கு வந்துள்ள அவர் பிரகாஷ் மேல் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் ‘என்னை பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அடிமை போல நடத்தினர். எனது காரைச் சுற்றி அடியாட்களை நிறுத்தினர். பிரகாஷைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று எனக்குக் குறும்செய்தி அனுப்பினார். எனக்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. அதனால் அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்