Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்திரன் 2 - ரஜினி ஹீரோ, அமீர்கான் வில்லன்...?

எந்திரன் 2 - ரஜினி ஹீரோ, அமீர்கான் வில்லன்...?
, வியாழன், 17 ஜூலை 2014 (18:36 IST)
எந்திரன் 2 குறித்த பேச்சுகள் சமீபமாக வலுவடைந்துள்ளன. ரஜினியே எந்திரன் 2 வில் நடிக்கிறார் என முதலில் செய்தி வெளியானது. சண்டைக் காட்சிகளில் ரஜினி இப்போதிருக்கும் நிலையில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் எந்திரன் 2 வில் அவர் நடிப்பது சந்தேகம் என பிறகு கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்குப் பதில் அஜீத், விஜய் இதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என மீடியா சொந்தமாக ஹாஸ்யம் எழுதியது.
இந்நிலையில் பிரபல வார இதழில் வெளியாகியிருக்கும் செய்தி இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடுவதாக உள்ளது. அப்படி அதில் என்ன கூறப்பட்டுள்ளது?
 
எந்திரன் 2 படத்தை எடுக்கும் முயற்சியில் ஷங்கர் ஏற்கனவே தீவிரமாக இருக்கிறார். கதையை தயார் செய்யும் வேலை ஏற்கனவே தொடங்கிவிட்டது... 

படத்தில் வில்லனாக நடிக்க யாரை போடுவது என பரிசீலித்தவர் கடைசியில் அமீர்கானை தேர்வு செய்துள்ளார். எந்திரன் 2 தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது. இதுதான் அந்த செய்தியின் சாராம்சம்.
webdunia
சென்ற வருடம் வெளியான தூம் 3 யில் அமீர்கான் வில்லனாக நடித்திருந்தார். படம் இந்திய திரையரங்குகளில் மட்டும் 290 கோடிகள் அளவுக்கு வசூல் செய்தது. அதுவே அமீர்கானை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்ற உறுதியை ஷங்கருக்கு தந்ததாகவும் கூறுகின்றனர்.
 
இது உண்மையா நடைமுறைக்கு வருமா என்பதெல்லாம் ஒருபுறம். எந்திரன் 2 வில் அமீர்கான் நடிக்கிறார் என்பதே சுவாரஸியமாக இருக்கிறதல்லவா.
 

Share this Story:

Follow Webdunia tamil