Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (07:35 IST)
கொரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பின்னர் சினிமா பார்வையாளர்கள் கணிசமானவர்களை ஓடிடி நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுத்துள்ளன. இதில் முன்னணியில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.

திரையரங்கில் ரிலீஸாகி ஒருமாதத்துக்குள் வெளியாகும் புதுப் படங்கள், உலக சினிமாக்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என அனைத்தும் நம் கைப்பேசிக்குள் கிடைப்பதால் கோடிக் கணக்கான மக்கள் இந்த ஓடிடி தளங்களுக்குப் பணம் கட்டி சந்தாதாரர்களாக உள்ளனர். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக செயல்பட்ட ஓடிடி நிறுவனங்கள் இப்போது அடுத்தடுத்து தங்கள் வருவாய் பெருக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே ஜியோ ஹாட்ஸ்டாரில் விளம்பரங்கள் திரையிடப்பட்டு வரும் நிலையில் தற்போது அமேசான் ப்ரைமும் இதே திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. ஒரு மணிநேரக் காட்சியில் சுமார் 4 முதல் 6 வரை விளம்பரங்கள் திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தவிர்க்க ஏற்கனவே கட்டியுள்ள சந்தாத்தொகையுடன் கூடுதலாக ரூ 699 கட்டி விளம்பரமில்லாமல் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மனைவி இல்லாவிட்டால் ‘காந்தாரா’ படமே இல்லை: ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் மார்வெலஸ் க்ளிக்ஸ்!

சிவப்பு நிற உடையில் ஒய்யாரப் போஸில் அசத்தும் மாளவிகா மோகனன்!

41 குடும்பங்களுக்கும் விஜய் மகனாக இருக்க வேண்டும்… பிரபல நடிகர் கருத்து!

பிரேம்குமாரின் அடுத்த படம் ‘ஆவேஷம்’ போல இருக்கும்… தயாரிப்பாளர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments