Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட கார்த்தி படம்

Webdunia
திங்கள், 14 மே 2018 (14:46 IST)
கார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை, இப்போதே விற்கப்பட்டு விட்டது. 
 
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. விவசாயியாக இந்தப் படத்தில் நடித்துள்ள கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதத்தில் தன்னுடைய புல்லட்டின் முன்னால் ‘விவசாயி’ என எழுதி வைத்துள்ளார். ‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடித்துள்ளார்.
 
படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை, அமேஸான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டுள்ளது.
 
படம் ரிலீஸான பிறகு சில மாதங்கள் கழித்து அமேஸான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படம் ரிலீஸுக்கு முன்பே அமேஸானுக்கு விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

“தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்… அதில் நான்…” – இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பல இடங்களில் மாற்றம் சொன்ன சென்சார்… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments