Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அற்புதமான முதல்நாள் - சபாஷ் நாயுடு பற்றி ஸ்ருதி

அற்புதமான முதல்நாள் - சபாஷ் நாயுடு பற்றி ஸ்ருதி

அற்புதமான முதல்நாள் - சபாஷ் நாயுடு பற்றி ஸ்ருதி
, புதன், 8 ஜூன் 2016 (11:17 IST)
சபாஷ் நாயுடு படத்தில் கமலுடன் ஸ்ருதியும் நடிக்கிறார். படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. 

 
டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.
 
சபாஷ் நாயுடு படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு குறித்து ஸ்ருதி ட்வீட் செய்துள்ளார். அதில், 
'முதல்நாள் படப்பிடிப்பு அற்புதமாக இருந்தது. அப்பாவுடன் நடிப்பது கௌரவம். அப்பா படப்பிடிப்புதளத்தில் இருந்தால் பாஸிடிவ் எனர்ஜி நம்மையும் தொற்றிக் கொள்ளும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் சபாஷ் நாயுடு படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவரா அவரா தெரியாது...