Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிவின் பாலியுடன் இணையும் அமலா பால்

நிவின் பாலியுடன் இணையும் அமலா பால்
, திங்கள், 28 ஏப்ரல் 2014 (11:04 IST)
அமலா பால், இயக்குனர் விஜய் காதல் உறுதியானதும் எழுந்த முதல் கேள்வி, திருமணத்துக்குப் பின் அமலா பால் நடிப்பாரா?
இதற்கு விஜய் நேரடியாக பதிலளிக்கவில்லை. என்றாலும் இப்போதைக்கு திருமணமில்லை என்று மட்டும் கூறினார். அதனை உறுதி செய்வது போல் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அமலா பால்.
 
தமிழில் வெளியான சென்னையில் ஒருநாள் படத்தின் மலையாள ஓரிஜினல் ட்ராஃபிக்கை இயக்கியவர் ராஜேஷ் பிள்ளை. இவர் தனது ட்ராஃபிக்கை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளார். இந்திப் படம் முடிவடைந்த நிலையில் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார்.
 
மிலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படத்தில் அமலா பால் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோ நிவின் பாலி.
 
அமலா பால் திருமணம் வரையாவது படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்பதையே அவரின் இந்த புதியப்பட ஒப்பந்தம் காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil