Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் படம்… நடிக்கவிருக்கும் இரண்டு நடிகர்கள்!

vinoth
திங்கள், 3 மார்ச் 2025 (09:40 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற திரைப்படத்துக்கு பிறகு  8 ஆண்டுகளாக அவர் எந்த படமும் இயக்காமல் கடைசியில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. அதன் பின்னர் அவர் இயக்கிய கிஃப்ட் என்ற திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர் சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இப்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்துக்குக் கதையும் கார்த்திக் சுப்பராஜே எழுதியுள்ளார். இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் உன்னி முகுந்தன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments