புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் எப்போது?.. நெட்பிளிக்ஸ் கொடுத்த அப்டேட்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (07:29 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்தது. இப்போது வரை கணிசமான திரையரங்குகளில் இந்த படம் ஓடி வருகிறது. படம் இதுவரை 1900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் மூலம் இந்திய சினிமாக்களில் அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்துக்குப் பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை ‘புஷ்பா 2’ படைத்துள்ளது. இதையடுத்து இந்த படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில் படத்தின் அனைத்து மொழி உரிமைகளைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘புஷ்பா 2 விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும்” என அப்டேட் கொடுத்துள்ளது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் இந்த படம் ஓடிடியில்  ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்னாத் படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments