Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

vinoth
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (07:54 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் படத்தை பார்க்க பெண் ஒருவர் தனது மகனுடன் சென்றிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது,

இந்நிலையில் அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அங்கு வரவேண்டாம் என காவல்துறை அனுமதி மறுத்ததையும் மீறி அல்லு அர்ஜுன் வந்ததாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அல்லு அர்ஜுனின் கைதுக்கும் இதுதான் காரணமாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன் இதற்கு  விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘நான் எப்போதும் என்னுடையப் பட ரிலீஸன்று தியேட்டருக்கு சென்று முதல் நாள் காட்சியைப் பார்ப்பேன். நான் அன்று சென்றபோது போலீஸ் காரர்கள் கூட்டத்தை சரி செய்துகொண்டிருந்தனர். அதனால் போலீஸ் அனுமதி அளித்துள்ளார்கள் என்றுதான் நான் நினைத்தேன். அவர்கள் அனுமதி மறுத்தது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது ஒரு  தகவல் பரிமாற்றப் பிரச்சனைதான். இதில் யாருடைய தவறும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments