அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்குவது உறுதி - லிங்குசாமி!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (14:48 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை கைவிடவில்லை என லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி வாரியர்’ திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ரன்னிங் டைம் மட்டும் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ராம் பொத்தினேனி ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த படத்தில் நதியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் லிங்குசாமியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லிங்குசாமியிடம்,அல்லு அர்ஜூன் படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்,   என் இயக்கத்தில்  அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள படம் கைவிடப்படவில்லை. மேலும், அப்படத்திற்கான கதை இன்னும் முடிவாகவில்லை, அதனால்தான் அப்படம் இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அல்லு அர்ஜூனை நிச்சயம் இயக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments