Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படமாக, கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது!

J.Durai
வியாழன், 6 ஜூன் 2024 (10:53 IST)
நரேந்திர மோடி, கேரளா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பல முன்னணி திரையுலகப் பிரபலங்கள் #PayalKapadia பாயல் கபாடியா மற்றும் படத்தில் பங்குகொண்ட நடிகர்களான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, ஹிருது ஹாரூன், சாயா கதம் மற்றும் அஜீஸ் ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த சந்தர்ப்பத்தில், ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படத்தின் நடிகர்களில் ஒருவரான ஹிருது ஹாரூன் இது குறித்து கூறுகையில்…
 
இயக்குநர் #PayalKapadia, தயாரிப்பாளர்கள் மற்றும் குழுவினர், எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைவருக்கும், ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 
 
முன்னதாக பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில்,  ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் இவரது நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
 
தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும்,நடித்து முடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments