Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தது… சந்தோஷத்தில் ‘பாகுபலி’ டீம்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (12:46 IST)
எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்து, திட்டமிட்டபடி வருகிற வெள்ளிக்கிழமை ‘பாகுபலி’ படம் ரிலீஸாகிறது. இதனால்,  சந்தோஷத்தில் இருக்கிறது ‘பாகுபலி’ டீம்.
 
 
பிரபாஸ், ராணா ரகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாகுபலி-2’. வருகிற 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப் படம், பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியாகிறது. ஆனால்,  கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாவதில் சில சிக்கல்கள் எழுந்தன. 
 
9 வருடங்களுக்கு முன்பு காவிரிப் பிரச்னையில் கர்நாடகத்தை எதிர்த்து சத்யராஜ் பேசியதைக் குறிப்பிட்டு, ‘அவர் மன்னிப்பு  கேட்டால்தான் படத்தை ரிலீஸ் செய்வோம்’ என வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சில அமைப்புகள் குரல் எழுப்பினர். சத்யராஜ்  வருத்தம் தெரிவித்ததால், அங்கு பிரச்னை நீங்கி படம் ரிலீஸாகிறது. 
 
தமிழ்நாட்டில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், வேறு சிலருக்கு பணம் தரவேண்டி இருந்ததால், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவை தலையிட்டு இருதரப்புக்கும் சமரம் செய்து வைத்ததால், அவர்களும் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டனர். இதனால், தமிழ்நாட்டிலும் சிக்கல்  தீர்ந்தது. இப்படி, பல பிரச்னைகளைக் கடந்து வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது ‘பாகுபலி-2’.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments