Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஷ்டத்துக்கு எதையாவது எழுதி விடாதீங்கப்பா..! – ஆர்.ஆர்.ஆர் பட நாயகி வருத்தம்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:51 IST)
ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கியது குறித்து நடிகை ஆல்யா பட் விளக்கமளித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும் இந்த படத்தில் இந்தி நடிகர்களான அஜய் தேவ்கன், ஆல்யா பட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக பட ப்ரொமோஷன் பணிகளின்போது ஆல்யா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா தனது இன்ஸ்டாகிராமிலிரிந்து ஆர்.ஆர்.ஆர் படம் குறித்த பதிவுகளை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆல்யாவுக்கும், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கும் இடையே மனவருத்தம் ஏற்பட்டதாக பேசிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தற்போது விளக்கமளித்து பதிவிட்டுள்ள ஆல்யா பட் “இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை மேம்போக்காக பார்த்துவிட்டு கட்டுக்கதைகளை எழுத வேண்டாம். எனது இன்ஸ்டாகிராம் பக்கம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிலுள்ள பழைய வீடியோக்களை ஒழுங்குபடுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். ஆர்.ஆர்.ஆர் படத்தில் நான் நடித்ததை மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். ராஜமௌலி இந்த படத்திற்காக அயராது உழைத்துள்ளார். தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments