Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு ராசியான திரையரங்கில் ஜில்லா விழா

ரஜினிக்கு ராசியான திரையரங்கில் ஜில்லா விழா
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:15 IST)
சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்குக்கு ரஜினி தியேட்டர் என்ற செல்ல பெயர் உண்டு. ரஜினி நடித்தப் படத்துக்குதான் ஆல்பர்டில் முதல் மரியாதை. மல்டிபிளக்ஸ்களின் வருகைக்கு முன்புவரை ரஜினியின் இரு மகள்களும் ரஜினி நடித்தப் படங்களை முதல்நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் அமர்ந்து இந்தத் திரையரங்கில்தான் கண்டு களிப்பார்கள்.
ரஜினி மூன்று வருடத்துக்கு ஒருமுறை படம் நடிப்பதால் ரஜினியின் இடத்தை விஜய்க்கு தந்திருக்கிறார்கள். அகில உலகில் இந்த ஒரேயொரு திரையரங்கில் மட்டும்தான் ஜில்லா படம் 100 நாள்கள் ஓட்டப்படுகிறது.
 
ஆல்பர்ட் வளாகத்தில் ஆல்பர்ட் என்ற பெரிய திரையரங்கும், பேபி ஆல்பர்ட் என்ற சின்ன திரையரங்கும் இயங்கி வருகிறது. அதில் பேபி ஆல்பர்ட்டில் ஒரு காட்சியாக ஜில்லாவை 100 நாள்கள்வரை விடாப்பிடியாக ஓட்டுவது என்று சபதம் செய்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டனர். 
 
இந்த நூறாவது விழா வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய்யையும் அழைக்க இருக்கிறார்களாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil