Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண பயத்தை கொடுத்த லக்ஷ்மி பாடல் இப்படித்தான் உருவாச்சா...? மேக்கிங் வீடியோ!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (20:57 IST)
தமிழ் திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.

அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ் வெறித்தனமாக நடித்து ஹிட் கொடுத்தார்.

திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி , காஞ்சனா, காஞ்சனா 1 , காஞ்சனா  2,   காஞ்சனா 3 என அத்தனை படமும் வசூலில் சாதனை செய்தது.

இப்படி தமிழ்,  தெலுங்கை தொடர்ந்து தற்போது காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் அக்சய் குமாரை வைத்து லாரன்ஸ் இயக்கி வருகிறார். கடந்த 2011ம் ஆண்டு தமிழில் வெளியான காஞ்சனா படத்தில் சரத் குமார் ஒரு திருநங்கையாக நடித்திருப்பார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். லக்‌ஷ்மி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில்  அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் , பாடல் , போஸ்டர் உள்ளிட்டவை நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டதா?

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments