Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு போட்டியாக களமிறங்கும் அக்சயகுமார்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (10:22 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமான அக்சய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கோல்ட்' என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே ஆகஸ்ட் 10ஆம் தேதி கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அக்சய்குமாரின் 'கோல்ட்' திரைப்படம் கமல் படத்திற்கு போட்டியாக களமிறங்கியுள்ளது.
 
பாலிவுட்டில் அக்சய்குமார் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரது படத்திற்கு தான் வட இந்திய மாநிலங்களில் உள்ள திரையரங்குகள் முக்கியத்துவம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும், சமீபத்தில் வெளியான டிரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாலும் அக்சய்குமார் படத்திற்கு கடும் போட்டியை கமல் படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விளையாட்டு சம்பந்தமான திரைக்கதையுடன் கூடிய 'கோல்ட்' படத்தில் அக்சய்குமார், குணால் கபூர், மெளனிராய், அமித் சத், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஹாக்கி வீரர் சந்தீப் சிங், இந்த படத்தில் நடித்தவர்களுக்கு ஹாக்கி பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments