ஏன் இப்படி குழப்புகிறார் அக்‌ஷய் குமார்?

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (21:49 IST)
‘2.0’ படத்தின் வெளியீடு பற்றி குழப்பம் ஏற்படும் வகையில் பேசிவருகிறார் அக்‌ஷய் குமார்.


 
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
ஆனால், அன்றைய தினம் தான் தயாரித்து, நடித்துள்ள ‘பேட்மேன்’ படம் ரிலீஸாகும் என அறிவித்தார் அக்‌ஷய் குமார். ஒரே நாளில் இரண்டு படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பதால், ‘2.0’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்ற பேச்சு அடிபட்டது.

ஆனால், திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும் என லைகா நிறுவனம் அறிவித்தது. ஆனாலும், தன்னுடைய அறிவிப்பையும் அக்‌ஷய் குமார் மாற்றவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “என்னுடைய படம் ரிலீஸாகவில்லையென்றால் ‘2.0’ வெளியாகும். ‘2.0’ வெளியாகவில்லை என்றால் என்னுடைய படத்தை ரிலீஸ் செய்வேன்” என்று தெளிவாகக் குழப்பியுள்ளார் அக்‌ஷய் குமார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

அடுத்த கட்டுரையில்
Show comments