அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம்… ரிலீஸீல் முக்கிய மாற்றம்!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (12:12 IST)
அக்‌ஷய் குமார் நடிப்பில் கொரோனா காலத்தில் படமாக்கப்பட்ட பெல்பாட்டம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அக்‌ஷய் குமார் படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என குறுக்கிட்டு தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்தி சொல்லி ரிலீஸை ஜூலை 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments